மதுரை பழங்காநத்தத்தில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரின் சொத்து மோசடியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி விஜய் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் மோசடி சொத்து பதிவு தொடர்பாக விசாரிக்க சார்பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகள் கேட்கப்பட்டது. ஆனால், கேமரா பதிவுகளைச் சேமித்து வைப்பதில்லை என்று கூறி அதனைத் தர சார்பதிவாளர் மறுத்துவிட்டார்.
பின்னர் கேமரா பதிவு இல்லாமல் விசாரணையை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது என்று கூறிய நீதிபதி, சார் பதிவாளர் அலுவலக சிசிடிவி கேமரா பதிவுகளை வருகிற 25ஆம் தேதிக்குள் பதிவுத் துறை தலைவர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.