ETV Bharat / state

ஊராட்சி செயலாளர் நியமனத்திற்கு தடை: விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - Melpakkam

Virudhunagar District Collector: மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்ட கரிசல்குளம் ஊராட்சி செயலாளர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்த நிலையில், இந்த வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai HC ordered the Virudhunagar District Collector
மதுரை உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 9:39 AM IST

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைக்கு முரணான ஊராட்சி செயலாளர் நியமனத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான மனு மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், மேலப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக கோவிந்தம்மாள் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரை பணியிட மாற்றம் செய்து அய்யனார் என்பவரை ஊராட்சி மன்ற செயலாளராக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்தது. இந்நிலையில் உடல்நலம் குன்றி அய்யனார் இறந்துவிட்டார்.

எனவே, இந்த ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கு மாவட்ட நிர்வாகம் பாலமுருகன் மற்றும் தர்மராஜ் என்பவரை பொறுப்பு செயலாளராக நியமனம் செய்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து விதிமுறைகளுக்கு முரணாக முருகன் என்பவரை பஞ்சாயத்து செயலாளராக நேரடி நியமனம் செய்துள்ளனர்.

இது பஞ்சாயத்து சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு நேற்று (ஜன.3) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாரிஸ் குமார் ஆஜராகி, புதியதாக இயற்றப்பட்ட 2023வது பஞ்சாயத்து செயலாளர் நியமன விதியின் படி இந்த நியமனம் செய்யப்படவில்லை.

ஒரு பஞ்சாயத்தில் காலிப்பணியிடம் ஏற்பட்டால், அதனை நேரடி நியமனம் மூலம் மட்டுமே நியமனம் செய்ய முடியும். ஆனால், பணி இடமாறுதல் மூலமாக இந்த பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி விதிமுறைக்கு முரணாக ஊராட்சி செயலாளர் நியமனத்திற்கு தடை விதித்து வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி விவகாரம்; மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.