மதுரை: மதுரை மாவட்டம் பீபீ குளத்தைச் சேர்ந்த ரெங்கம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது மகன் ஈஸ்வரன் கார்பெண்டராக பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில் தவறான புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரணை எனக்கூறி எனது மகனை அழைத்துச் சென்று துன்புறுத்தியதால், தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் விசாரித்தால் வழக்கின் உண்மை நிலை தெரியவராது. ஆகவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 14) விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் ஆகியோர் நிலை அறிக்கையைத் தாக்கல்செய்ய வேண்டும் எனவும், அதுவரை வழக்கில் இறுதி அறிக்கையைத் தாக்கல்செய்ய இடைக்காலத் தடைவிதித்தும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் செயல்படுவேன் - தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி