ETV Bharat / state

விளம்பரப் பலகை விழுந்ததில் கல்லூரி மாணவர் இறப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! - மாணவர் குடும்பத்தாருக்கு இழப்பீடு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்ட விளம்பரப்பலகை விழுந்ததில் உயிரிழந்த என்ஜினீயரிங் மாணவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 10:35 PM IST

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த சுவாமிஜி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது மகன் விக்னேஷ், என்ஜினீயரிங் படித்து வந்தார். 2014ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அன்று பவுர்ணமியையொட்டி, அவர் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றார். அப்போது அங்கிருந்த விளம்பர பலகை திடீரென விக்னேஷ் மீது விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த எனது மகனை சிகிச்சைக்காக மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு இரும்புத்தூணை பிடித்ததில், மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவும் காரணம். எனவே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருவண்ணாமலை ஒரு புகழ் பெற்ற யாத்திரை தலம். இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. ஆனால் கிரிவலப்பாதையில் இருந்த விளம்பரப்பலகை விழுந்ததால்தான் மனுதாரர் மகன் காயம் அடைந்தார்.

பின்னர் மருத்துவ முகாமில் இரும்புத்தூணில் மின்சார கசிவு இருந்துள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும்தான் பொறுப்பு. எனவே இவர்கள்தான் மனுதாரர் மகன் இறப்புக்கு இழப்பீடு வழங்க பொறுப்புடையவர்கள். எனவே மனுதாரர் மகன் விக்னேஷ், பள்ளிப்படிப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று, கல்லூரியிலும் சிறந்த மாணவனாக இருந்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். எனவே அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத்தொகையை நான்கு வாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 6 விழுக்காடு வட்டியுடன் உரிய தொகையை செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: “மகளிர் இடஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு நாடகம்” - எம்பி திருச்சி சிவா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.