ETV Bharat / state

காவல்நிலையத்தில் சந்தேக மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு எப்படி செய்ய வேண்டும்.. நீதிமன்றத்தின் விளக்கம்.. - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

தமிழ்நாட்டில் காவல்நிலையம், சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் சந்தேக மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விளக்கம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 5:35 PM IST

மதுரை மாவட்டம் பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்த கல்லூரி மாணவர் ரமேஷின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவிடகோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவரது சகோதரர் சந்தோஷ், மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சந்தேக மரணம் என்று புகார் எழுந்த பிறகு, பிரேத பரிசோதனை மதுரை அல்லது தேனி அரசு மருத்துவமனையில் நடத்தாமல் அவசர அவசரமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டு உயிர் இழந்துள்ளார் என்று புகார் கூறப்பட்டுள்ள நிலையில், ஏன் உரிய விதிமுறைகளை பின்பற்றி பிரேத பரிசோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதன் பின் சந்தேக மரணங்கள் குறித்து புகார் எழுந்தால், உடற்கூராய்வு மேற்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து, இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

அதன் விவரம் வருமாறு: காவல் நிலையம், சிறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சந்தேக மரணம் என்று புகார் எழுந்தால், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவர் உடற்கூராய்வின் போது உடன் இருக்க அனுமதிக்க வேண்டும். உடற்கூராய்வுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இந்த பிரேத பரிசோதனையின் வீடியோ கிராஃபி முடிந்த உடனேயே, இறந்தவரின் பெயர், வயது உள்ளிட்ட வழக்கு தொடர்பான அத்தியாவசிய விவரங்கள் மற்றும் பொதுவான விவரங்கள், பிரேத பரிசோதனை விவரங்கள் போன்றவை வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிறகு, பிரேதப் பரிசோதனையை நடத்தும் தடயவியல் மருத்துவ நிபுணர், மெமரி சிப்/வீடியோ கேசட்டை உடனடியாக சீல் செய்து, தேவையான அனைத்து விவரங்களுடன் உடனடியாக வழக்கு விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். .பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ ஆகியவை ஒரே நேரத்தில் இறந்தவரின் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசு வழங்கப்பட வேண்டும். இதுவே இறந்தவரின் குடும்பத்தினர் உடனடியாக சட்டப்பூர்வ தீர்வுகளை நாடுவதற்கு உதவும். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு, இறந்த குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசு / பிரதிநிதிகள் உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதாக எழுத்துப்பூர்வமாக அளித்தால், உடல் குறைந்தது 48 மணிநேரம் பிணவறையில் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குள் தகனம் செய்தோ அல்லது வேறு வழியிலோ உடலை அப்புறப்படுத்தினால், இரண்டாவது போஸ்ட்மார்ட்டம் நடத்துவதன் நோக்கம் பயனற்றதாகிவிடும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு மாணவர் கொலை; சக மாணவர்கள் மூவர் கைது.. வழக்கில் ஆசிரியர்கள் பெயரும் சேர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.