ETV Bharat / state

‘வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவகம் தாக்குதல் - ஏஎஸ்பி தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு - விருதுநகர் டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க மதுரை கிளை உத்தரவு

விருதுநகர் : வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரித்து செய்து அறிக்கை தாக்கல் செய்ப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.

madurai bench
madurai bench
author img

By

Published : Feb 7, 2020, 4:17 PM IST

விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான், கடந்த 11.01.2020 அன்று வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த சிந்து முருகன் என்பவரும் போட்டியிட்டார். எனக்கு ஏழு வாக்குகளும், சிந்து முருகனுக்கு ஆறு வாக்குகளும் கிடைத்தன.

எனது வெற்றியை தேர்தல் அலுவலர் அறிவித்தார். ஆனால், அதிமுக-வினர் தங்கள் கட்சியைச் சேர்ந்த சிந்து முருகனைத்தான் வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் அலுவலகத்திற்குள்ளேயே தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால், இதனை தேர்தல் அலுவலர் ஏற்க மறுத்துவிட்டார்.

அப்போது, இங்கு காவல் பணியிலிருந்த திருவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. தேர்தல் நடந்த அலுவலகத்தை திறந்துவிட்டு அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டார்.

இதனைப் பயன்படுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்த ஆளுங்கட்சியினரும், சிந்து முருகன் தலைமையிலான கும்பலும், அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில், இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்தன. மேலும், நான் வெற்றி பெற்றதை அறிவிக்கவிடாமலும் செய்து விட்டனர்.

ஆனால், அலுவலர்களை மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதமடையச் செய்த சிந்து முருகன், அவரது கும்பல் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், உயிரைக் கொடுத்தாவது நான் (கண்ணன்), யூனியன் தலைவராவதை தடுப்போம் எனக் கூறி வருகின்றனர்.

எனவே, அடுத்துவரும் தேர்தலில் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவலகம் தாக்குதல் சம்பவத்தை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி. தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர் - விருதுநகர் எஸ்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Intro:வத்தராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தலின் போது யூனியன் அலுவலகத்தை சூறையாடிய ஆளுங்கட்சியினரை கைது செய்யக் கோரிய வழக்கில் விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி. க்கு விசாரணையை மாற்றி
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:வத்தராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தலின் போது யூனியன் அலுவலகத்தை சூறையாடிய ஆளுங்கட்சியினரை கைது செய்யக் கோரிய வழக்கில் விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி. க்கு விசாரணையை மாற்றி
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்த கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், நான் வத்தராயிருப்பு ஒன்றிய 4 வது வார்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனது கட்சியின் சார்பில் 7 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
நான், கடந்த 11.01.2020 அன்று நடந்த வத்தராயிருப்பு ஒன்றிய தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அ.தி.மு.க.வை சேர்ந்த சிந்து முருகன் என்பவரும் போட்டியிட்டார்.எனக்கு 7 வாக்குகளும், சிந்து முருகனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.
இதனை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் அ.தி.மு.க. வினர் தங்கள் கட்சியை சேர்ந்த சிந்து முருகனைத்தான் அறிவிக்க வேண்டும் . இல்லையெனில் அலுவலகத்திற்குள்ளேயே, தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
ஆனால், இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார். அப்போது இங்கு காவல் பணியில் இருந்த திருவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. தேர்தல் நடந்த அலுவலகத்தின் திறந்து விட்டு அ.தி.மு.க வினருக்கு சாதகமாக செயல்பட்டார். இதனை பயன்படுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்த ஆளுங்கட்சியினரும், சிந்து முருகன் தலைமையிலான கும்பலும், அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.மேலும், நான் வெற்றி பெற்றதை அறிவிக்க விடாமலும் செய்து விட்டனர்.அதிகாரிகளை மிரட்டி, அலுவலக பொருட்களை சேதமடைய செய்த சிந்து முருகன், மற்றும் கும்பல் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் உயிரைக் கொடுத்தாவது நான், (கண்ணன்) யூனியன் தலைவராவதை தடுப்போம் என கூறி வருகின்றனர்.எனவே அடுத்துவரும் தேர்தலில் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, வத்தராயிருப்பு யூனியன் தாலுகா அலுவலகம் தாக்குதல் சம்பவத்தை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி
வழக்கு விசாரணையை விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி. தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.