ETV Bharat / state

மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - உயர்நீதிமன்ற மதுரை கிளை

Madurai New Autos Ban Case: மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு தடை கோரி வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 6:43 PM IST

மதுரை: மதுரையில் புதிய ஆட்டோ அல்லது சி.என்.ஜி. ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த கருப்பையா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதுரை மாநகர் பகுதியில் ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில், டீசல் ஆட்டோவில் இருந்து எல்பிஜி ஆட்டோக்களாக மாற்றி ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என 2015-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தற்போது சி.என்.ஜி. ஆட்டோக்களுக்கு அதிகமாக அனுமதி அளித்து, வியாபார நோக்கத்துடன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இதனால் வாகன நெரிசல் அதிகமாகி, மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் முழுவதும் பணிகள் நடைபெற்று வருவதால், சாலைகள் முழுவதும் சீர் இல்லாமல் உள்ளது. மேலும் அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் 4 சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என பெருகி வரும் நிலையில், மதுரையில் புதிய ஆட்டோ அல்லது சி.என்.ஜி ஆட்டோக்களுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று (செப்.27) நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.