ETV Bharat / state

மதுரையில் ரூ.20 லட்சம் கொள்ளை: போலி தேர்தல் அலுவலர்கள் கைவரிசை! - போலி தேர்தல் அலுவலர்கள்

மதுரை: தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் எனக்கூறி நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து, சுமார் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, குற்றவாளிகளை காவல் துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர்.

மதுரை கருப்பாயூரணி காவல் நிலையம்
author img

By

Published : May 10, 2019, 12:04 PM IST

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான சரவணக்குமார், ஆனந்தன் இருவரும், மதுரையில் உள்ள தங்களுடைய தலைமை அலுவலகத்தில் பணத்தை செலுத்துவதற்காக சுமார் ரூ.20 லட்சம் ரொக்கப் பணத்தை அரசுப் பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது மதுரை வரிச்சியூர் பகுதியில் அரசுப் பேருந்தை 'தேர்தல் அவசரம்' என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் வழிமறித்தது, அதில் இருந்து இறங்கி வந்த நான்கு பேர் தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்திருந்தி சரவணக்குமார், ஆனந்தன் ஆகியோரை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி, அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, பணத்தை வாங்கிய பிறகு, சிறிது தூரம் சென்ற உடன் இருவரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர்.

இதனால் ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைந்த அந்த இருவர் அருகில் இருந்த கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், பணத்தை வாங்கித் சென்ற அந்த கும்பல் போலி தேர்தல் அலுவலர்கள் என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரூ. 20 லட்சம் ரூபாயை திருடிய அந்தக் கும்பலை கைது செய்ய காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Intro:Body:

*மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி எனக்கூறி நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம் சுமார் 20 லட்சம் கொள்ளை - காவல் நிலையத்தில் புகார்*

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களான சரவணக்குமார்,ஆனந்தன் இருவரும்,

மதுரையில் உள்ள தங்களுடைய தலைமை அலுவலகத்தில் பணத்தை செலுத்துவதற்காக பேருந்தில் சுமார் 20 லட்சம் ரூபாயை கொண்டு அரசு பேருந்தில் வந்துள்ளனர்,

அப்போது மதுரை வரிச்சியூர் பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் இருந்து இறங்கி வந்த நான்கு பேர் தேர்தல் பறக்கும் படையினர் என கூறியுள்ளனர்,

நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யார் பேருந்தில் இருந்தாலும் எழுந்து வந்து விடவும் என எச்சரித்து ஊழியர் இருவரையும் காரில் ஏற்றிகொண்டு சிறிது தூரம் சென்ற உடன் கிழே இறக்கிவிட்டுள்ளனர்,

மர்ம கும்பலால் தங்களுடைய பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அறிந்த நிதி நிறுவனத்தின் ஊழியர் கருப்பாயூரணி காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர்,

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊமச்சிகுளம் டிஎஸ்பி நல்லு அவர்கள் தலைமையில் தனிப்படையினர் இரண்டு ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்,

தேர்தல் நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.