மதுரை: மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவரும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சடித்து கௌரவிக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தேரஷ், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இளைஞர்களின் நாயகன் சுபாஷ் சந்திர போஸ்!