ETV Bharat / state

கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் சொன்ன தகவல்

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
author img

By

Published : Jun 9, 2021, 6:20 PM IST

மதுரை: தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக விதைகளுக்கு பயிர் கடன் வழங்குதல், உர விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன்.9) நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ’விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க 11 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, குறைவின்றி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா தொற்று நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

மழையால் சேதமடையும் விளை பொருள்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி

கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்’என்றார்.

இதையும் படிங்க: 'குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'- வேலூர் ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.