ETV Bharat / state

இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை

இலங்கை சிறையில் 9 ஆண்டுகளாக உள்ளவரை இந்திய சிறைக்கு மாற்ற கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

MDU
MDU
author img

By

Published : Jul 20, 2021, 1:15 PM IST

ராமநாதபுரத்தை சேர்ந்த மெஹ்ருன்நிஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது கணவர் ரிபாயுதீன் மீது கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2016 ஆம் ஆண்டு முதல் இலங்கை சிறையில் உள்ளார்.

இலங்கை சிறையில் இருந்து இந்திய சிறைக்கு மாற்றுவது குறித்து இந்திய தூதரகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இலங்கை சிறையிலுள்ள கணவரை இந்திய சிறைக்கு மாற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் இலங்கை, கொழும்பில் உள்ள உயர்மட்டக் குழுவிடம் ஆலோசனை செய்து கைதியை தமிழ்நாடு சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் 2 காவல்துறையினரை பாதுகாப்பிற்காக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கைதியை இந்தியா கொண்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் 2 காவல்துறையினரை பாதுகாப்பிற்காக அனுப்புவது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ’மயானங்களை அடிப்படை வசதிகளுடன் பராமரிங்க’ - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.