நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக்கோரி அத்தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் எம். சங்கர சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். இவர்களை தொகுதியிலிருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, தேர்தலை அக்டோபர் 21ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்ப்டுகிறது.
இதையும் படிக்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் தேவையா? - உதயநிதி காட்டம்