மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லிஸ் நகர் ரயில்வே மேம்பாலத்தில் திடீரென இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல்விடுத்தார். இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. கூட்டத்திலிருந்த பொதுமக்கள், தீயணைப்பு, காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
அச்சமயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென மேலே ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டிய இளைஞரை மீட்டு கீழே கொண்டுவந்தார்.
அச்சமயம் அங்கு வந்த காவல் துறையிடம் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒப்படைக்கப்பட்டார். காவல் துறை நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் எல்லிஸ் நகரைச் சேர்ந்த லெனின் குமார் என்பதும் தனக்குப் பிறந்த குழந்தையை மனைவியும் அவரது வீட்டாரும் பார்ப்பதற்கு அனுமதி மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் - தடுப்பணை கட்ட கோரிக்கை