மதுரை மாநகரில் உள்ள 22 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட எல்லைப் பகுதியில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. இதனால், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாதன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு எத்தனை வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன? அதில் எத்தனை சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டன என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஆணையர் அலுவலகம் அளித்த தகவலின்படி, 136 வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும், அதில் 24 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் நான்கு கிலோ தங்கம் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![gold](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-rdi-gold-theft-script-visual_16022020161000_1602f_1581849600_203.jpg)
அதேபோல், 2019ஆம் ஆண்டு மட்டும் மதுரை மாநகரில் 66 செயின் பறிப்புச் சம்பவங்களில், 312 சவரன் நகைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 92 சவரன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை