ETV Bharat / state

சபரிமலை சீசனில் தற்காலிகக் கடை அமைக்கத் தடை! - high court give permission

மதுரை: கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

high court temporary shop in kanyakumari
author img

By

Published : Oct 22, 2019, 4:12 PM IST

கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.

ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் நிலையம் வரை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம்வரை சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரை ஓரம் தற்காலிகக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதுபோன்ற அனுமதியை வழங்கக் கூடாது. ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் தற்காலிகக் கடைகள் மூலமாக ஏற்படும் குப்பைகளும் நெகிழிக் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கிறது. இதனால் கடலில் வசிக்கும் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கிறது.

கன்னியாகுமரி பேரூராட்சியின் இந்தச் செயல் கடற்கரைச் சூழலை பாதிக்கும். கடலோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அனுமதித்தால் கண்டிப்பாக அது கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

எனவே, கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் நிலையம்வரை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம்வரை சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு தற்காலிகக் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு 250 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. அதனை எவ்வித அரசியல் தலையீடு இல்லாமல் பொது ஏலம் விட வேண்டும் என்றும் அத்தகைய கடைகளில் முற்றிலுமாக நெகிழியை உபயோகப்படுத்தக் கூடாது. வெளிநாட்டுப் பொருள்களை வியாபாரம் செய்யவும் தடைவிதித்தனர்.

மேலும், 2020ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தற்காலிகக் கடைகள் அமைக்கவும் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி - பிரதமர் மோடி சந்திப்பு!

Intro:கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சூரிய அஸ்தமன நிலையம் வரை இந்த ஆண்டு தற்காலிகமாக 250 கடைகளுக்கு மட்டுமே அமைக்க அனுமதி, 2020 ம் ஆண்டு முதல் தற்காலிக கடைகள் அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.Body:கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சூரிய அஸ்தமன நிலையம் வரை இந்த ஆண்டு தற்காலிகமாக 250 கடைகளுக்கு மட்டுமே அமைக்க அனுமதி, 2020 ம் ஆண்டு முதல் தற்காலிக கடைகள் அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கன்னியாகுமரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், மத்திய அரசு சமீபத்தில் 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கை படி கடற்கரை ஓரத்தில் எந்த விதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சூரிய அஸ்தமன நிலையம் வரை ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் கால த்தை முன்னிட்டு கடற்கரை ஓரம் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது . இது போன்ற அனுமதியை வழங்க கூடாது ..ஆண்டு தோறும் அனுமதிக் கப்படும் தற்காலிக கடைகள் மூலமாக ஏற்படும் குப்பைகளும் , பிளாஸ்டிக் கழிவுகளும் நேரடியாக கடலில் கலக்கிறது .மேலும்,கடலில் வசிக்கும் எண்ணற்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழலை பாதி க்கிறது. கன்னியாகுமரி பேரூராட்சி யின் இந்த செயல் கடற்கரை சூழலை பாதிக்கும்.கடலோரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அனுமதித்தால் கண்டிப்பாக அது கடலின் மேற்பரப்பிலும் கடலுக்குள்ளும் பிளாஸ்டிக் பாலிதீன் மற்றும் குப்பைகள் நேரடியாக சென்று கடலுக்கும் பாதிப்பு பாதிப்பு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.எனவே, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து சூரிய அஸ்தமன நிலையம் வரை ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை சபரிமலை சீசன் கால தற்காலிய கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது இவ்வாறு மனுவில் கூறியிருத்தார் ..

இந்த மனு நீதிபதிகள், சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது, இந்த ஆண்டு 250 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது, எவ்வித அரசியல் தலையீடு இல்லாமல் பொது ஏலம் விட வேண்டும், முற்றிலுமாக பிளாஸ்டிக் உபயோகப்படுத்த கூடாது,மேலும் வெளிநாட்டு பொருட்கள் வியாபாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.2020 ம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.