ETV Bharat / state

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு முன்பு முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Mar 12, 2020, 9:10 AM IST

மதுரை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கணேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கருவுற்றிருந்த எனது மனைவி ருக்மணியை பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருக்கும் பெண் மருத்துவர் கருவைக் கலைத்து குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளுமாறு கூறினார்.

2011 மார்ச் 19ஆம் தேதி எனது மனைவியின் கருவைக் கலைத்து குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபோது, கவனக்குறைவாக ஆக்சிஜனுக்குப் பதிலாக நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை அதிகமாக ஏற்றியுள்ளனர். அதில், என் மனைவியின் உடல்நிலை மோசமானதால், வேறு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கலாம் என டிஸ்சார்ஜ் செய்ய கூறியபோது, தங்களது தவறினை மறைப்பதற்காக டிஸ்சார்ஜ் செய்ய மறுத்துவிட்டனர்.

இதனால் கோமா நிலைக்குச் சென்ற எனது மனைவியை மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர்களும் தங்களது துறை சார்ந்தவர்களைக் காக்கும் வகையில் சரியான தகவல்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் எனது மனைவியை சிகிச்சைக்காக அனுமதித்தபோது, மிகவும் தாமதமாக தங்களது மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்திருப்பதாகவும் நீதிமன்ற உத்தரவினை மதித்து சிகிச்சைக்காகத் தங்களது மனைவியை அனுமதிப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2012 மே 4ஆம் தேதி எனது மனைவி உயிரிழந்தார். எனவே, எனது மனைவியின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது குடும்பத்திற்கு ஏற்பட்ட விலைமதிக்க முடியாத இழப்பிற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு ஏதும் வழங்கப்பட்டுள்ளதா, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மதுரையில் குப்பை லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.