மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் அமைச்சர் மூர்த்தி அரசு துணை சுகாதார நிலையத்தை நேற்று (ஆகஸ்ட் 5) தொடங்கிவைத்தார். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”வரும் 13ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்களும், ஏற்றங்களும் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. மக்களுக்குப் பயன்படக்கூடிய பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவுபெற்றுள்ளது. மகத்தான பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது. தொற்றின் எண்ணிக்கையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். 15 வகையான பலசரக்குப் பொருள்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
பேருந்துகளில் இலவசமாக பெண்கள் தற்சமயம் பயணம் செய்துவருகின்றனர். தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். இது போன்ற பல்வேறு சாதனைகளைச் செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
ரூபாய் 5 லட்சம் கோடி கடனாக இருப்பினும்கூட மக்களைத் திருப்திப்படுத்தக் கூடிய பட்ஜெட். பத்திரப்பதிவுத் துறையிலும் பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து செய்துவருகிறோம். சட்டவிதிகளுக்குள்பட்டு கிரானைட், கல்குவாரி தொழில்கள் நடைபெறும்’’ என்றார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் உதயமாகும் அறிவாலயம்