மதுரை: இதுதொடர்பாக மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு இன்று (மே 26) காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கரோனா முதல் அலையில் மிகத் தீவிரமாக இயங்கி மக்களைக் காப்பாற்றியது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கண்டறிந்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
அதேபோன்று ஊரடங்கின்போது மக்களுக்குத் தேவையான காய்கறி, பழ வகைகளை வீட்டிற்கே நேரடியாகச் சென்று வழங்கியது. மதுரையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்டிலும் இதற்காகவே 4 வாகனங்கள் இயங்கின.
ஆனால், தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தனை உயிர்ப் பலிகளுக்குப் பிறகும் மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த முறை நாங்கள் ஊரடங்கு அறிவித்த போது, மக்கள் இதன் பொருளாதாரச் சுமையை எப்படி தங்குவார்கள் என அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால், தற்போது அதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்.
பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும். கரோனா தொற்றிலிருந்தும் மக்களை மீட்க வேண்டும். மக்களும் மிக எச்சரிக்கையாக கவனத்தோடு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'போர்க்கால நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது'- அமைச்சர் மா.சு