தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் நாள் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட மார்ச் 10ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லும் பணம், நகை உள்ளிட்டவை தேர்தல் பறக்கும் படையினரால் தொடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மதுரையை அடுத்த அய்யர் பங்களா பகுதியில் உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கம் , வாகனம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சேலம் நகைக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படையினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.