ETV Bharat / state

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் 24 மணி நேரத்தில் கைது! - கொலை வழக்கில் 5 பேர் கைது

மதுரை : கொலை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து நபர்களை மாநகரக் காவல்துறை 24 மணி நேரத்தில் கைது செய்தது.

accuest
accuest
author img

By

Published : Aug 27, 2020, 10:31 PM IST

மதுரை, திருப்பாலை அருகே உள்ளது சிறுதூர். இங்குள்ள ஜவஹர்லால்புரம் சாலையில் முன்விரோதம் காரணமாக முருகன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முருகனின் மனைவி முத்துச்செல்வி, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதனடிப்படையில், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய, தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி, செல்லூர் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி, செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் தியாகப் பிரியன், தல்லாகுளம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகநாதன், தலைமை காவலர்கள் முத்துக்குமார், செல்வராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, தீவிர விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ணன் (வயது 47), தீபக் என்ற பாண்டியராஜன் (வயது 24), அஜித்குமார் (வயது 24), அமீர்கான் (வயது 24), பாண்டி (வயது 24) ஆகிய ஐந்து நபர்களை தனிப்படைக் காவலர்கள் கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினருக்கு மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.