கரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவிவரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை மிகக் கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விற்பனையாளர்களும், விவசாயிகளும் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்
மதுரை மல்லிகை 120 ரூபாய் , பிச்சிப் பூ 150 ரூபாய், முல்லைப்பூ 150 ரூபாய், ரோஸ் 50 ரூபாய் என விற்பனை செய்யப்படுவவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சுப நிகழ்ச்சிகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பூக்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் சந்தை வெறிச்சோடி இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.