மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பணியாற்றிவரும் காமாட்சி என்ற பெண் ஊழியர் போலியான கல்விச் சான்றிதழை வழங்கி பணியாற்றிவருவதாகப் புகார் ஒன்று எழுந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலின் நிர்வாகம் விசாரணை செய்ததில் காமாட்சி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊழியர் காமாட்சியைப் பணியிடை நீக்கம்செய்து கோயில் இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார். காமாட்சி, மேலும் பல ஊழியர்களைப் போலி சான்றிதழ் பயன்படுத்தி வேலைக்குச் சேர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோயிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள் பெறப்பட்டு, அவர்கள் படித்த பள்ளிக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பள்ளியிலிருந்து வரும் அறிக்கையைப் பொருத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தடைசெய்யப்பட்ட சைலன்சர்கள்: மெக்கானிக் கைது