ETV Bharat / state

சர்ச்சையில் சிக்கிய மேயர் இந்திராணி; மதுரையில் நடந்தது என்ன? - கைப்பை

தன்னுடைய கைப்பையை தூக்கிச்செல்வதற்கு ஊழியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கேள்வி எழும் வகையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மேயர் மீது எழும் குற்றச்சாட்டு
மதுரை மேயர் மீது எழும் குற்றச்சாட்டு
author img

By

Published : Nov 4, 2022, 3:37 PM IST

Updated : Nov 4, 2022, 4:20 PM IST

மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் பதவி வகித்துவருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்து இவரது கணவரின் ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து இருப்பது, கட்சி அலுவலகம் போல செயல்பட்டது, முதன்முறையாக மேயருக்கென தனி ஆலோசகரை நியமித்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

மேலும் மாமன்றக்கூட்டத்தில் மேயர் தங்களது வார்டு பகுதியின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை எனக்கூறி திமுக மாமன்ற உறுப்பினர்களே வெளிநடப்பு செய்தது; வணிக வரித்துறை அமைச்சரின் தொகுதியிலயே எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என மேயருக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என வணிகவரித்துறை அமைச்சரே கூறும் வகையில் செயல்பட்டது என நாள்தோறும் மதுரை மாநகராட்சி மேயரைச்சுற்றி ஏதேனும் ஒரு சர்ச்சை எழுந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் புகார்களைப்பெறுவதற்கான அதிநவீன குறைதீர் மைய தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்த நிலையில் அவரை வரவேற்பதற்காக மேயர் இந்திராணி நீண்டநேரமாக பூங்கொத்துடன் காத்திருந்தார்.

அப்போது மேயர் இந்திராணியின் கைப்பையை (ஹேன்ட் பேக்) மாநகராட்சி ஊழியர் ஒருவர், தனது கையில் வைத்துக்கொண்டே நீண்டநேரமாக மேயரின் அருகில் நின்றுகொண்டே இருந்தார். இதனையடுத்து நிதியமைச்சர் வந்தபோது அவருடன் மேயரும் லிப்டில் சென்றார். மேயரின் கைப்பையை தூக்கிவந்த ஊழியர், அதனை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் மூச்சிறைக்க ஓடி வந்தார்.

நிகழ்ச்சி முடிந்து நிதியமைச்சரை, மேயர் வழியனுப்பும் போதும் அலுவலகத்தில் இருந்த தனது கைப்பையை எடுத்து வருமாறு அந்த ஊழியரை பணித்தார். அப்போது அந்த ஊழியர், மீண்டும் மூச்சிறைக்க ஓடிச்சென்று மேயரின் கைப்பையை கொண்டு வந்து கொடுத்தார். இதனை வாங்கிக்கொண்டு மேயர் புறப்பட்டார்.

ஹேன்ட்பேக் தூக்கிச் செல்ல ஊழியரா..? மதுரை மேயர் மீது எழும் குற்றச்சாட்டு

மேயர் இந்திராணி பொன்வசந்த்தின் இந்த செயல் அங்குள்ள பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் மாநகராட்சி மேயரின் கைப்பையை தூக்கி சுமப்பதற்கு தனி ஊழியரா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு மேயரின் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியால் சொமாட்டோ ஊழியரை தாக்கி பீட்சா, பர்கரை பறித்து சென்ற இளைஞர்...

Last Updated : Nov 4, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.