மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அவ்வப்போது அனல் காற்றும் வீசியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பகல் நேர வெப்ப அதிகரிப்பின் காரணமாக பொது மக்களின் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக விமானநிலையம், பெருங்குடி, நாகமலை, செக்கானூரணி, அழகர் கோயில் ஆகிய பகுதியில் இன்று காலையிலிருந்தே மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இதற்கிடையில் திடீரென பெய்த மழை பத்து நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது
கடும் வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இது திடீர் மழை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.