மதுரை மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 13 உறுப்பினர் பதவிகளையும், அதிமுக 9 ஊராட்சி உறுப்பினர் பதவிகளையும், ஃபார்வர்டு பிளாக் 1 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியையும் கைபற்றின.
வெற்றி பெற்ற 23 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மதுரை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் டி.ஜி.வினய் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் இவ்விழாவில் கலந்து கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ' பண பலம், அதிகார பலத்துக்கு இடையே திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒன்றியச் சேர்மன் பதவிக்கு பணத்தைக் கொடுத்து திமுக வாக்கு பெறத் தேவையில்லை. திமுக ஒரு நாளும் அச்செயலை செய்யாது. திமுகவின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள்' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் தலை துண்டான இளைஞரின் உடல்