ETV Bharat / state

வானொலி மூலம் உதவிக் கேட்ட மூதாட்டி... ஓடோடி உதவிக்கரம் நீட்டிய காவல்துறை ஆணையர் - மூதாட்டிக்கு உதவிய காவல்துறை ஆணையர்

வானொலி மூலம் உதவிக் கேட்ட மூதாட்டிக்கு மதுரை மாநகர காவல் துணை ஆணையர் பாஸ்கரன் அவரது வீட்டிற்கே சென்று உதவிக்கரம் நீட்டினார்.

வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டி
வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டி
author img

By

Published : Jun 4, 2021, 9:57 PM IST

மதுரை: சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் கோமளவள்ளி (83). கணவனை இழந்த இவர், தனது வாழ்வாதாரத்திற்காக தனி நபராக தேநீர் கடை நடத்தி வருகிறார். கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேநீர் கடையை நடத்தமுடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் பாஸ்கரன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், உணவில்லாத ஆதரவற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை வீட்டிலிருந்தபடியே ரேடியோவில் கோமளவள்ளி கேட்டுள்ளார்.

இதையடுத்து காவல் துணை ஆணையர் பாஸ்கரன் கூறிய விலாசத்துக்கு, தனக்கு உதவுமாறு கடிதம் ஒன்றினை மூதாட்டி எழுதி அனுப்பியுள்ளார். கடிதம் கிடைத்தவுடன் துணை ஆணையர் பாஸ்கரன், கோமளவள்ளியின் இல்லத்துக்கு நேரில் சென்று அரிசி, மளிகை சாமான்கள், பழங்களை வழங்கி ஆறுதல் வார்த்தைகள் கூறி அவரை தேற்றியுள்ளார்.

வானொலி மூலம் உதவிக் கேட்ட மூதாட்டிகு உதவிய காவல் துணை ஆணையர் பாஸ்கரன்

மேலும் ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம், தொண்டு நிறுவனத்தின் மூலம் மூதாட்டி கோமளவள்ளிக்கு 3 வேலை உணவளிக்கவும் ஏற்பாடு செய்தார். காவல் துணை ஆணையரின் இந்த செயலுக்கு மக்களிடையே வரவேற்பு பெருகியுள்ளது.

இதையும் படிங்க: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.