தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லியில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் கலந்து கொண்டனர். தற்போது சுகாதாரத் துறை, காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் நாகமலை புதுகோட்டையில் ஒருவர், ஏழுமலை பகுதியில் மூன்று பேர், சேடபட்டி, புறநகர் பகுதிகளில் மொத்தமாக 10 பேரை அடையாளம் கண்டு காவல் துறையினர் துணையுடன் மதுரை தோப்பூர் சிறப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு சளி, ரத்தம் பரிசோதனை செய்ய மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் டெல்லி சென்று திரும்பிய பலரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருக்கையில் அமரவைத்து நிவாரணம் வழங்கும் நியாவிலைக் கடை.