ETV Bharat / state

டெல்லி, பெங்களூருவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை - Corona test for delhi and bangalore passenger

மதுரை: டெல்லி, பெங்களூருவிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

Madurai Airport
Madurai Airport
author img

By

Published : May 30, 2020, 5:28 PM IST

உள்நாட்டு விமான சேவை தொடங்கியதை அடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு மே 27, 28ஆம் தேதிகளில் வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை டெல்லி மற்றும் பெங்களூருவிலிருந்து மதுரை விமான நிலையம் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று மதுரை விமான நிலையத்திற்கு டெல்லியிலிருந்த வந்த விமானப் பயணிகள் 90 பேருக்கும், பெங்களூருவிலிருந்து வந்த 70 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பரிசோதனை செய்யப்பட்ட 160 பயணிகளும் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அனைத்து பயணிகளும் அனுப்பப்படுவார்கள் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியிலிருந்து மதுரை வந்த ராணுவ வீரருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.