ETV Bharat / state

கரோனா பரவல் தீவிரம் - நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை - medical camp

கரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பை குறித்து பொதுமக்களும், மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையுடன் செயல்பட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா பரவல் தீவிரம் - நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை

author img

By

Published : Apr 23, 2021, 3:12 PM IST

கரோனா பரவல் குறித்து, பொதுமக்களும் மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கையுடன் செயல்பட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இன்று (ஏப்ரல் 23) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில் என்னுடைய வேண்டுகோளினைச் சமர்ப்பிக்கிறேன். நமது மாவட்டத்தில் நோய்த்தொற்றின் வேகம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நோயப்பரவலின் வேகம் கடந்த வாரம் 6.34%ஆக இருந்தது இந்த வாரம் 7.17%ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களின் தினசரி எண்ணிக்கை 500யைக் கடந்துகொண்டிருக்கிறது. இந்த வேகத்தைக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அடுத்த வாரம் நமது மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை உருவாகும். அதற்கான முன்னெச்சரிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், மருத்துவ முகாம் தற்போது 240ஆக இருப்பதை உடனடியாக 400ஆக உயர்த்த வேண்டும்.

பரிசோதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 15000 ஆக இருப்பதை 25000 ஆக உயர்த்த வேண்டும். இதனைச் செய்வதன் மூலமே நோய்ப்பரவலின் வேகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அடர்த்தி கொண்டநகரம் மதுரை என்பதனை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் நிலைமை மிகவேகமாகக் கைமீறும்.

இதையடுத்து, கட்டாய முககவசம், சமூக இடைவெளி போன்றவை கடைப்பைடிக்க வேண்டும். கடந்த ஓராண்டுகாலம் தொடர்ந்து சவாலான பணியினை சந்தித்துக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் துணைநிற்போம். இந்த கடுமையான சூழலில் நம்மையும் சமூகத்தையும் பெருந்தொற்றிலிருந்து காக்க முழுமையான விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.நம்முடைய பொறுப்புணர்ச்சியும் கூட்டுச்செயல்பாடுந்தான் நம்மைக்காக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை நாளில் அரசியல் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.