ETV Bharat / state

தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவரை அவமதித்த மாநகர ஆணையர்: குடியரசுத் தலைவரிடம் புகார்? - Chairman of the Cleaning Authority

மதுரை மாநகராட்சி ஆணையர் தன்னை அவமதித்தாகக் குற்றஞ்சாட்டிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் ம. வெங்கடேசன், இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ம. வெங்கடேசன்
ம. வெங்கடேசன்
author img

By

Published : Jul 12, 2021, 7:48 PM IST

மதுரை: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை கேட்டறிய தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் மதுரை வந்திருந்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து பேசுவதற்காக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனுக்கும் அழைப்புவிடுத்தார்.

தன் உடல் நிலையைக் காரணம் காட்டி மாநகராட்சி ஆணையர் போராட்டம் நடந்த இடத்திற்கு வர மறுத்த நிலையில், தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டி வெங்கடேசன் போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாநகராட்சி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் ம. வெங்கடேசன்

குடியரசுத் தலைவரிடம் புகார்

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், "மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தேசிய ஆணையத்தை அவமதித்துவிட்டார்.

இது குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கவுள்ளேன். மதுரை மாநகராட்சியில் பணியின்போது பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. இது குறித்து முதலமைச்சரிடம் புகார் மனு அளிக்கவுள்ளோம்.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் சார்பில் கோரிக்கைவிடுக்கவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ’தூய்மைப் பணியாளர்களுக்கு தரச்சான்று பெற்ற உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.