மதுரை: கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த கோபிநாத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரூர் மாவட்ட நெடுஞ்சாலையில் கரூர்-அரவக்குறிச்சி தாலுகா நெடுஞ்சாலையில் உள்ள வெண்ணைகொதுர், குரும்பம்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளை நீக்க உத்தரவிட வேண்டும். இதுகுறித்து அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே, சட்ட விரோதமாக கரூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை நீக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு துணை பொறியாளர் தரப்பில், மனுதாரரின் மனுவினை பரிசீலனை செய்து ஏற்கெனவே சிமென்ட் கற்களால் அமைக்கப்பட்ட வேகத்தடைகளை நீக்கியதற்கு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது
இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்ட துணை பொறியாளர் தெரிவித்துள்ள தகவலில் தவறு இருக்கும்பட்சத்தில், மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத்தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: காமராஜர் குறித்து அவதூறு; ஒரு கண்டனம் கூட தெரிவிக்கத் திராணியற்றது காங்கிரஸ் கட்சி..