இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மதுரை ஆட்சியர் நாகராஜுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாகவும், அவர் ராமநாதபுரத்தில் பணிபுரிந்த போதே தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.எம் சாமி வாட்ஸ் அப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கறிஞர் சி.எம்.சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ள தல்லாகுளம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.