மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன், ஆதிலெட்சுமி தம்பதி.
ஜெயராமனுக்கு மது பழக்கம் உள்ளதால் ஆதிலெட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று (நவ.2) மீண்டும் தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த ஆதிலெட்சுமியின் சகோதரர் தங்கப்பாண்டி தகராறை தடுக்க வந்துள்ளார். உடனே ஜெகராமன் தங்களது குடும்பப் பிரச்னையில் தலையிட வேண்டம் என தங்கப்பாண்டியை எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து ஜெயராமன், ஆதிலெட்சுமியிடம் தகராறு செய்தார். அக்கா மீது கொண்ட பாசத்தால் தம்பி தங்கப்பாண்டி கட்டையால் ஜெயராமனை தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையிலான காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை செய்த தம்பி தங்கப்பாண்டி, சம்பவத்தின்போது உடனிருந்த அக்கா ஆதிலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வறுமையால் நேர்ந்த சோகம்: குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தீக்குளிப்பு!