ETV Bharat / state

சிவகங்கையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிக அரிய அரிகண்ட சிற்பம் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பம்

author img

By

Published : Jul 2, 2023, 11:07 AM IST

மதுரை: சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவுநர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், இணைச்செயலாளர் க. முத்துக்குமார் ஆகியோர் சோழபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிகண்ட சிற்பத்தை அடையாளம் கண்டுள்ளனர். இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் “சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சோழபுரம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சோழபுரத்தில் இருந்து நாலு கோட்டைக்குச் செல்லும் வழியில் உள்ள எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் இந்த சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றார்.

அரிகண்டம்: “தலைவன் அல்லது மன்னன் போரில் வெற்றி பெற வேண்டியோ அல்லது நோயிலிருந்து மீளவோ காளி தேவியிடம் வேண்டிக் கொண்டு, போரில் வெற்றி பெற்ற பிறகு அல்லது உடல் நலம் பெற்ற பிறகு, தன் தலையை தானே அரிந்து உயிர் விடுதலே அரிகண்டமாகும். நவகண்டம் என்பது ஒன்பது இடங்களில் வெட்டி, உடம்பை ஒன்பது கண்டங்களாக்கி உயிரைத் துறப்பது என்பர். அரிகண்டம், நவகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் கலிங்கத்துப் பரணியில் இடம் பெற்று உள்ளன.

திரிசூலமிட்ட எல்லைக்கல்
திரிசூலமிட்ட எல்லைக்கல்

அவி பலி, தலைப்பலி, தன்பலி, அரிகண்டம் ஆகிய பெயர்களில் இவை வழங்கப் பெறுகின்றன. அரிகண்டமாக தன் தலையை வெட்டி உயிர் கொடுத்தவருக்கு உதிரக்காணி வழங்கப்படுவதும் உண்டு. காளையார் கோயில் ஒன்றியம் மல்லலில் இவ்வாறான சோழர் கால கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது” எனவும் கூறினார்.

அரிகண்ட சிலை: “இரண்டடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் உடைய சிலையானது ஒரு காலை முன் வைத்து, மற்றொரு காலை பின் வைத்து மடக்கி அமர்ந்த நிலையில், இடது கையில் தன் தலைக் குடும்பியை பிடித்துக் கொண்டும், வலது கையில் வாளால் தன் தலையை அரிவதுமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் காதில் காதணிகளும், முன்கையில் வளையல்களும், பின் கையில் தோடாவும், கழுத்தில் பதக்கம் போன்ற ஆபரணமும், இடையில் ஆடையும் அணிந்து வளமுடையவராக காட்டப்பட்டு உள்ளது. ஆகையால், இவர் படைத்தலைவனாக இருந்திருக்கலாம். மேலும் இந்த சிற்ப அமைப்பைக் கொண்டு இது பதினோராம் நூற்றாண்டு சிற்பமாகக் கருதலாம்” என கூறினார்.

நடுகல் வீரர்கள்: இந்த சிலைக்கு அருகிலேயே நடுகல் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. மூன்று வீரர்கள் வரிசையாக நிற்கின்றனர். இதில் அனைவரும் வலது கையில் குத்துவாளை கீழ் ஊன்றியவாறும், ஒருவர் மட்டும் இடது கையில் வில்லை பிடித்தவாறும் காட்டப் பெற்றுள்ளது. முழுமையான வடிவமைப்பு தெரியாதவாறு சிலை மிகவும் சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

நடுகல் வீரர்கள்
நடுகல் வீரர்கள்

ஆயிரம் ஆண்டு பழமையான காளி சிலை: பிடாரி என்பது ஊர் வழக்கு சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. காளியே பிடாரியாக வழங்கப்படுவதாக தொல்லாய்வுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் பின்பகுதியில் கருவறையில் இருந்த பழமையான சிலைகளை வைத்துள்ளனர். அதில் ஒரு சிலை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருக்கலாம்.

ஆயிரம் ஆண்டு பழமையான காளி சிலை
ஆயிரம் ஆண்டு பழமையான காளி சிலை

இச்சிலை அமர்ந்த நிலையில் எட்டு கரங்களுடன் காளியாக காட்சி தருகிறது. இச்சிலை முன்பாகவே தலைப்பலி நிகழ்ந்திருக்கலாம். ஆயிரம் ஆண்டு பழமையை தாங்கிக் கொண்டு ஊர் எல்லையில் அரிதான அரிகண்ட சிற்பம் அமைதி காத்து நிற்கிறது.

யானைச் சிற்பம்
யானைச் சிற்பம்

யானைச் சிற்பம்: கோயில் வளாகத்தில் யானை சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இது மிகவும் சிதைந்து பழமை வாய்ந்ததாக உள்ளது. மேலும் திரிசூலமிட்ட எல்லைக்கல் ஒன்றும் நடப்பெற்றுள்ளது. கோயிலின் வெளியே சமீபத்திய விளக்குத்தூண் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இக்கோயிலில் அரிகண்டம் மற்றும் நடு கல் வீரர்கள், சிற்பங்கள் சேர்த்து சப்த கன்னிமாராக வணங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரையில் மீண்டும் மீன் சிலை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.