ETV Bharat / state

எதன் அடிப்படையில் திராவிடர் கழகம் சட்டத்திற்கு விரோதமானது? - நீதிபதிகள் கேள்வி - திராவிடர் கழகம் சட்டத்திற்கு விரோதமானதா?

மதுரை: திராவிடர் கழகம் ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து, அதன் பொதுச் செயலாளர் கி.வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

madurai
madurai
author img

By

Published : Aug 5, 2020, 3:37 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "சில நாள்களுக்கு முன்பு தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோக்கள் பதிவிடப்பட்டன. சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்கி வீடியோக்களை பதிவிட எந்த கட்டணமும் தேவையில்லை என்பதால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இது திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவாகவே உள்ளது. இந்து மக்களையும் அவர்களது எண்ணங்களையும் திராவிடர் கழகம் புண்படுத்தி வருகிறது. இந்து சமூகத்தை பின்பற்றுபவர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை திராவிடர் கழகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், திராவிடர் கழகத்தை ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவித்து, அதன் உடமைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசன விதி 51 பிரிவின்படி எவ்வாறு திராவிடர் கழகம் எதிரானது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் இந்த வழக்கை விளம்பரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஆளுநர் பன்வாரிலால் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.