மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி பொன் ஊஞ்சல் உற்சவத்தின் 2ஆம் நாளான நேற்று (ஜூலை 4) கோயில் கட்டுப்பாடுகள் காரணமாக குறைவான பக்தர்களே பங்கேற்றனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூலை 3 முதல் ஜூலை 11ஆம் தேதி வரை நடக்கிறது.
இந்த நாள்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 10 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிபார்.
இதனைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவை தருவர். இந்த நிலையில், கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை, முகக்கவசம் கட்டயாம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைந்தது. மேலும் இன்றிரவு முதல் (ஜூலை 5) இரவு முதல் 6ஆம் தேதி காலை 7 மணி வரை வெள்ளியம்பல நடராஜருக்கு திருமஞ்சனம் மற்றும் கால பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி:14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்க முடிவு..!