நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேட்புமனுவைத் தாக்கல் செய்ய நேற்று (மார்ச் 26) கடைசி தேதி என்பதால் வேட்பாளர்கள் தீவிரமாகத் தங்களது தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, மதுரையில் 36 வேட்பாளர்கள் ஆண்கள் 29, பெண்கள் 6, திருநங்கை 1 என வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் அலுவலர் நடராஜனிடம் அதிமுக, சி.பி.எம், அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தமாக 6 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அதிமுக சார்பில் ராஜ்சத்யனும், சி.பி.எம் சார்பில் சு.வெங்கடேசனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டேவிட் அண்ணாதுரையும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் ஆகிய 4 வேட்பாளர்கள் தலா 2 வேட்புமனுக்களும், மற்ற வேட்பாளர்கள் தலா ஒரு வேட்புமனு என்ற கணக்கில் 36 வேட்பாளர்கள் 40 வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 29 ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.