மதுரையில் இன்று புதிதாக 107 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மதுரையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 5ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 468 பேர் குணமடைந்ததன் மூலம் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 452ஆக உயர்ந்துள்ளது. 288 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இன்று மட்டும் ஆறு பேர் உயிரிழந்தனர்.
தற்போது, இறப்பு விகிதம் குறைந்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் 7 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் சோதனைகள் நாளொன்றுக்கு செய்யப்படுகின்றன. மேலும், மதுரை நகரின் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 5,000-ஐ நெருங்கும் உயிரிழப்பு