ஓசூர்: கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளைப் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களைச் சாகச பயணமாக இயக்கி வரும் இளைஞர்களைக் கைது செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் முதல் சூளகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது மட்டுமின்றி முன் சக்கரத்தை (வீலிங்) உயர்த்தியபடி வாகனங்களுக்கு இடையூறாகச் சாலைகளில் வட்டமிட்டவாறு சாகச பயணமாக நினைத்து ஓட்டி வருகின்றனர்.
மற்ற பயணிகளை இடிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டும் இவர்களால் சரியாக ஓட்டுபவர்களும் விபத்துக்குள்ளாவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதி சூளகிரி என்கிற நிலையில் தினந்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இன்று (டிச.12) ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சண்டை சேவல், கன்னி நாய்கள் சீதனம்.. தங்கை திருமணத்தில் அசத்திய அண்ணன்!