கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையைச் சேர்ந்தவர் ராஜண்ணா, இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லெட்சுமி(55) தினந்தோறும் ராஜண்ணாவிற்கு உணவு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று தளி அருகே ஒரு மேய்ச்சல் நிலத்தில் ராஜண்ணா தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
இதையடுத்து வழக்கம் போல் லட்சுமி தனது கணவர் ராஜண்ணாவிற்கு உணவு கொண்டுச் சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.
இது ஏதும் அறியாத ராஜண்ணா இரவு வீடு திரும்பிய போது, லட்சுமி வீட்டில் இல்லாததால் கண்டு அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடி உள்ளார். இந்நிலையில், லட்சுமி ஒரு ஓடையில் கழுத்து அறுபட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.