தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 26 பேர், வேன் ஒன்றில் கோயிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கவனக் குறைவால், நிலைதடுமாறி வேன் விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார், 20 பேர் படுகாயமடைந்தனர், 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது இவர்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது தேன்கனிக்கோட்டை அடுத்த அய்யூர் அருகே பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த பெல்லம்மா(50), தனது வீட்டின் அருகே இருந்த மரத்தடியில் நின்றுகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஆம்பன் புயல் - குமரியில் பலத்த கடல் சீற்றம்