ETV Bharat / state

கத்தியால் குத்தி முதியவர் கொலை! முகமூடி நபர்களுக்கு போலீஸ் வலை! - latest crime news

கிருஷ்ணகிரி: ராய கோட்டை அருகே முதியவரை கத்தியால் குத்திக் கொலை செய்த முகமூடி அணிந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கத்தியால் குத்தி முதியவர் கொலை
author img

By

Published : Oct 23, 2019, 6:11 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ளது எடவனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சாக்கப்பன் (60) என்பவர் கிராமத்தின் அருகில் தோட்ட வீட்டில் மனைவி, மகன் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். தேங்காய் வியாபாரியான இவர், லட்சக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

இதில், பலருக்கும் இன்று வரை பணம் வழங்காமல், வெளியில் செல்வதைத் தவிர்த்து ஆறுமாதகாலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சாக்கப்பாவின் மகன் வேணுகோபால் என்பவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட 8 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து பணம், நகை இருந்தால் தருமாறுக் கேட்டுள்ளனர்.

அதற்கு இல்லை என்று கூறிய சாக்கப்பாவை, கத்தியால் வெட்டிச் சாய்த்துள்ளனர். பிறகு வீட்டின் பின்புற கதவு வழியாகத் தப்பியோடியுள்ளனர். கண் பார்வையற்ற சாக்கப்பா மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் உயிருக்குப் போராடிய சாக்கப்பாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கத்தியால் குத்தி முதியவர் கொலை

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ராயக்கோட்டை காவல் துறையினர், சாக்கப்பாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாக்கப்பா ஏலச்சீட்டை வழங்காததால் கொல்லப்பட்டரா? அல்லது நகைகளுக்காகக் கொல்லப்பட்டரா? என்கிற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ள காவல் துறையினர், 8 பேர் கொண்ட முகமூடி கும்பலைத் தேடி வருகின்றனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ராய கோட்டை அருகே கத்தியால் குத்தப்பட்ட முதியவர் பலி: முகமூடி நபர்களுக்கு போலிஸ் வலைவீச்சுBody:கிருஷ்ணகிரி மாவட்டம் ராய கோட்டை அருகே கத்தியால் குத்தப்பட்ட முதியவர் பலி: முகமூடி நபர்களுக்கு போலிஸ் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே உள்ளது எடவனஹள்ளி கிராமம், இந்த கிராமத்தை சேர்ந்த சாக்கப்பன் (60) என்பவர் கிராமத்தின் அருகில் தோட்ட வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.

தேங்காய் வியாபாரியான இவர், லட்சக்கணக்கில் ஏலச்சீட்டு நடத்தி, பலருக்கும் இன்றுவரை பணம் வழங்காமல் வெளியில் செல்வதை தவிர்த்து 6 மாதகாலமாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது

சாக்கப்பாவின் மகன் வேணுகோபால் என்பவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட 8 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகை கேட்டதாகவும் இல்லை என்று கூறிய சாக்கப்பாவை அவர்கள் கொண்டு வந்த கத்தியால் வெட்டி உள்ளனர்.

வெளியில் சென்ற சாக்கப்பாவின் மகன் வேணுகோபால் வந்ததை அறிந்த பிறகு வீட்டின் பின்புற கதவு வழியாக மர்ம நபர்கள் தப்பியதாகவும், கண் பார்வையற்ற சாக்கப்பா மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் உயிருக்கு போராடிய சாக்கப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த இராயக்கோட்டை போலிசார் சாக்கப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்து சாக்கப்பா ஏலச்சீட்டை வழங்காததால் கொல்லப்பட்டரா? அல்லது நகைக்களுக்காக கொல்லப்பட்டரா? என்கிற விசாரணை தொடங்கி 8 பேர்கொண்ட முகமூடி கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.