கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் காரணமாக வேலையின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வீட்டிற்குள்ளேய முடங்கி கிடப்பதால், அரசு தரும் நிவாரண பொருள்களை நம்பி வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணப் பொருள்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பர்கூர் ஒன்றியத்திற்குள்பட்ட பட்லப்பள்ளி, சிந்தகம்பள்ளி,வரட்டணப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் ஏழை, எளியோருக்கு அத்தியாவசியப் பொருள்களான 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணைய், வெங்காயம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை: என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?