கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் குறைவழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து, ராயக்கோட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ராயக்கோட்டை அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை போக்க வேண்டும். விவசாயத்திற்குத் தேவையான அளவுக்கு மின் விநியோகம் செய்யப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டு வரை, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி. செல்லக்குமார், "விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு காங்கிரஸ், தோழமை கட்சிகள் எத்தகைய விலையையும் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:”தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே!” - திருமாவளவன் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்