ETV Bharat / state

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட தண்டோரா அறிவிப்பு - ஆழ்துளை தோண்டுவது மூடுவது பற்றியான விதிமுறைகள்

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடக்கோரி தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி தண்டோரா!
author img

By

Published : Oct 28, 2019, 11:33 PM IST

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 77 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளை மூடக்கோரி தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆழ்துளை தோண்டுவது மூடுவது பற்றியான விதிமுறைகள்:

1. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெற வேண்டியது அவசியம்.

2. முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்டப்பட வேண்டும். அதனை தொடர்புடைய நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம் கண்காணிக்கும்.

3. இடைவெளி நேரத்தில் ஆழ்துளைக் குழியை தற்காலிகமாக மூடிவைக்க வேண்டும்.

4. பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி அமைப்பது கட்டாயமாகும்.

5. தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளைக் கிணற்றை முறையாக மூடிவிட வேண்டும். நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்ப்படுத்த வேண்டும் என்ற விதி சட்டத்தில் உள்ளது.

6. ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

7. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்தக் கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும் அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும் என்பது விதி.

8. பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316 அ பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி தண்டோரா முலம் விழிப்புணர்வு.
Body:கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி தண்டோரா முலம் விழிப்புணர்வு.

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் வில்சன் (வயது 2) தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு நடவடிக்கைகைகள் தொடர்புடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது .

அதனை ஒட்டி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில்
ஆழ்துளை கிணறுகளை மூடக்கோரி தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆழ்துளை தோண்டுவது,மூடுவது பற்றிய விதிமுறைகள்

1. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெற வேண்டியது அவசியம்.

2. முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்டப்பட வேண்டும் அதனை தொடர்புடைய நகராட்சி,மாநகராட்சி நிருவாகம் கண்காணிக்கும்.

3. இடைவெளி நேரத்தில், ஆழ்துளைக் குழியை தற்காலிகமாக மூடி வைக்க வேண்டும்.

4.பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி அமைப்பது கட்டாயமாகும்.

5.தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணற்றை முறையாக மூடிவிட வேண்டும்,நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும் என்ற விதி சட்டத்தில் உள்ளது.

6.ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

7.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும் என்பது விதி.
8.பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316 அ பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.