கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப் படாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: அடக்குமுறையை மீறி போராட்டம் தொடரும்’ - முகிலன்