திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது . அப்போது, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் வேடியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நான்கு பயணிகளுக்கு பலத்த காயங்களும், 15 பயணிகளுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி காவல் துரையினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந் நடத்துனர் சுதாகரும், ஒரு பயணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : டேங்கர் லாரியில் மீது பைக் மோதல்: மூவர் பரிதாப உயிரிழப்பு!