ETV Bharat / state

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 5 பெண்கள் உயிரிழப்பு

author img

By

Published : Dec 21, 2020, 4:53 PM IST

Updated : Dec 21, 2020, 7:19 PM IST

டிராக்டர் கவிழ்ந்து விபத்து
டிராக்டர் கவிழ்ந்து விபத்து

16:15 December 21

கிருஷ்ணகிரி: டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர்கள் டிராக்டரில் பஸ்வேஸ்வரா கோயிலுக்கு சென்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தெப்பக்குழி பகுதியில் டிராக்டர் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தானது. இதில் மங்களம்மா (25), கௌரம்மா (60), புட்ட லிங்கம்மா (60), ஒசபம்மா (80), முள்ளம்மா(80) ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்விற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் இதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி மீது பேருந்து மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு

Last Updated : Dec 21, 2020, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.