கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறை, ஊர்காவல் படை, ஆயுதப் படை, தேசிய மாணவர் படை அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, சுதந்திரப்போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர், 11 துறைகளின் சார்பில், 398 பயனாளிகளுக்கு 2 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். இறுதியாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.