ETV Bharat / state

உலக சாதனை படைத்த கரூர் கும்மி, கொங்கு ஒயிலாட்டம்!

World Record: கரூரில் வன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கும்மி மற்றும் ஒயிலாட்ட நிகழ்ச்சியில், 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

உலக சாதனை படைத்த கரூர் கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:09 PM IST

உலக சாதனை படைத்த கரூர் கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்டம்

கரூர்: கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற கும்மி மற்றும் ஒயிலாட்ட நிகழ்ச்சியில், 2 ஆயிரத்து 200-க்கும் மேலான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று உலக சாதனையை நிகழ்த்தி உள்ளனர். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி பகுதியில், குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (அக்.26) இரவு கோயில் மைதானத்தில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே, இந்நிகழ்ச்சியைக் காண மண்மங்கலம், வாங்கல், நெரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

மேலும், விழா குழுவினர் சார்பில் மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொங்கு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என அனைவரும் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடை அணிந்து ஒயிலாட்டம் ஆடியது, பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.

இதையும் படிங்க: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் - அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி மற்றும் கொங்கு ஒயிலாட்ட நிகழ்ச்சியில், 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ், டிஸ்கவர் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

சமீப காலமாக கொங்கு மண்டலத்தில், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பாரம்பரிய ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதால், இளைய தலைமுறையினர் ஆர்வமாக பங்கேற்று, ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற கலைகளை மீண்டும் புத்துணர்வு பெற செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வருண லிங்கம் மகா கும்பாபிஷேகம் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.